காஞ்சிபுரத்துக்கு தென்மேற்கே 30 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது செய்யாறு என்று அழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் சிவபெருமான் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தின் உட்பொருளை ஓதி உணர்த்தியதால் திருவோத்தூர் என்று அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் தமது அருட்பாடலினால் ஆண் பனையை, பெண்பனையாக மாற்றிய தலம். கொடிமரத்தின் முன் நின்று ஒரே சமயத்தில் பஞ்சமூர்த்திகளையும் வணங்கும் அற்புத அமைப்பைக் கொண்ட தலம். |